பெர்த்:
மகளிர் ஹாக்கி தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது.
இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
இந்நிலையில் 3-வது போட்டி நேற்று பெர்த்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.
இந்தியாவின் சார்பில் 36-வது நிமிடத்தில் சோனுவும், 49-வது நிமிடத்தில் லால்ரேம் சியாமியும் தலா ஒரு கோலடித்தனர்.
இதைத் தொடர்ந்து ஹாக்கி தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.