ககாமிகஹாரா:
ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் மகளிருக்கான யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று தனது 2-வது இடத்தில் கொரியாவுடன் மோதியது.
இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் நூஷின் (4-வது நிமிடம்), ஸ்ருதி (21-வது நிமிடம்), கிரண் (43-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தியிருந்தது.
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (2-ம் தேதி) சிங்கப்பூருடன் மோதுகிறது.