பாஜகவின் வாஷிங்மெஷின் இப்போது தவெகவிடம் உள்ளது – அமீர் விளாசல்…

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், ஐயுஎம்எல் ஆதரவில் தவெக ஆட்சி அமைத்தது.


மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிளவுபட்ட அதிமுகவின் வேலுமணி, சண்முகம் அடங்கிய அணி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தது.

இதன்பின் வேலுமணி அணி அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உடன் சமரசம் செய்துகொண்டது.

ஆனால் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான மரகதம் குமாரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்து அதிமுகவில் இணைந்தனர்.


அவர்களின் ராஜினாமா உடனுக்குடன் ஏற்கப்பட்டு மரபிற்கு மாறாக தலைமைச் செயலகத்திலேயே அவர்கள் தவெகவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.


இது தவெகவின் கீழ்த்தரமான குத்திரப்பேரம் என அதிமுக குற்றம்சாட்டியது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆளுநரைச் சந்தித்து, த.வெ.க.வுக்கு எதிராக புகார் அளித்தனர்.


இந்த சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது குறித்து இயக்குநர் அமீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக விலிகிக்கள் ராஜினாமா செய்து, தலைமை செயலகத்திலேயே தவெகவில் இணைந்தது குதிரை பேரம் அல்ல அயோக்கியத்தனம்.


இவர்கள் என்ன மாநில உரிமைக்காகவா ராஜினாமா செய்தார்கள்? கால் கடுக்க வெயிலில் நின்று ஓட்டு போட்ட மக்கள் என்ன முட்டாளா?

மீண்டும் போட்டியிட வைத்தால் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. இதற்கு முன் பாஜகதான் இதை செய்தது. பாஜகவின் வாஷிங்மெஷின் தற்போது தவெகவிடம் உள்ளது.” என்று தெரிவித்தார்.


மேலும் விஜய் பிரசாரத்தின்போது கரூரில் 41 பேர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து பேசிய அமீர், “கரூர் சம்பவம் மிகப்பெரிய அநீதி.

உண்மை குற்றவாளி யார்? அதை செய்தது முந்தைய ஆட்சியாள ர்கள் தான் என்றால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அல்லது நடக்காத ஒன்றை நடந்ததாக நீங்கள் சொன்னீர்களா? இன்று உங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது.


நீங்கள் கேட்பதை செய்து கொடுக்க ஒன்றிய அரசின் CBI-ம் தயாராக இருக்கிறது.

தயவுசெய்து கண்டுபிடித்து மக்களுக்கு சொல்லுங்கள்” என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *