தமிழகத்தில் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது தவெக!!

சென்னை:
தமிழகத்தில் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் வெளியிட்ட அறிவிப்பில், ‘இம்மாதம் 18-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினரு க்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலை மையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் 6 ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலையில் முடிவடைகிறது.

இதனால், அந்த இடங்களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சி.வி.சண்முகம் உட்பட 3 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், 3 இடங்களுக்கு அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சி.வி.சண்முகம் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *