9-ந் தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப்பெருமானுக்கு பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* குரங்கணி முத்து மாலையம்மன் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
10-ந் தேதி (புதன்)
* திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
11-ந் தேதி (வியாழன்)
* சர்வ ஏகாதசி.
* சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தலங்களில் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
12-ந் தேதி (வெள்ளி)
* பிரதோஷம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
13-ந் தேதி (சனி)
* கார்த்திகை விரதம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர், திருக்கோஷ்டியூர், ராமகிரி பேட்டை தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.
* வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (ஞாயிறு)
* அமாவாசை.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜர், விபீசண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* ஆவுடையார்கோவில் சிவபெருமான் பவனி.
* மேல்நோக்கு நாள்.
15-ந் தேதி (திங்கள்)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.
* சிதம்பரம் சிவபெருமான் பவனி.
* திருவள்ளூர் வீரராகவர், மதுரை கூடலழகர் தலங்களில் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.