34 பந்துகளில் 66 ரன்கள் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்!…

மும்பை
மும்பை டி20 லீக்கில் நேற்று Arcs Andheri அணி Bandra Blasters அணியை எதிர்கொண்டது. Bandra Blasters டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதில் இந்தியன் பிரீமியர் லீக் 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர், Arcs Andheri-க்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பந்துவீச்சில் அர்ஜுன் டெண்டுல்கர் 3 ஓவர்களில் 11 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஒரு மெய்டன் ஓவரும் அடங்கிய இந்த சிறப்பான பந்துவீச்சால் Bandra Blasters அணி 9 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

145 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய Arcs Andheri, 26 ரன்கள் எடுத்து திவ்யான்ஷ் சக்சேனா ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் முஷீர் கான் இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அர்ஜுன் 34 பந்துகளில் அவுட் ஆகாமல் 66 ரன்கள் எடுத்தார். முஷீர் கான் 38 பந்துகளில் அவுட் ஆகாமல் 54 ரன்கள் சேர்த்தார். இந்த அதிரடி பார்ட்னர்ஷிப் உதவியுடன் Arcs Andheri 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட அர்ஜுன் டெண்டுல்கருக்கு Arcs Andheri அணியின் கேப்டன் ஷிவம் துபே டிரெஸ்ஸிங் ரூமில் பாராட்டு தெரிவித்தார்.

தனது பெயர் அழைக்கப்படும்போது அர்ஜுன் உணர்ச்சிவசப்பட்டது சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில் தெளிவாகத் தெரிந்தது. மேலும் ஷிவம் துபே பல வீரர்களைப் பாராட்டினார்.

சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில், “எங்கள் அணியில் ஒன்றல்ல, அஜய் மிஸ்ரா மற்றும் முஷீர் கான்” என்ற இரண்டு முதுகெலும்புகள் உள்ளன.

திவ்யான்ஷ் அற்புதமான தொடக்கம் கொடுத்தார். முஷீரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என வீரர்களைப் பாராட்டினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *