எனது 50 வருட கால நண் பர் பாரதிராஜா என்னை வாழ வைத்தவர் பாரதிராஜா!! பாரதிராஜாவின் புகழ் என்றென்றும் மக்கள் மனதில் நீடிக்கும்-ரஜினிகாந்த்!!

சென்னை

சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் பாரதிராஜாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:-

* எனது 50 வருட கால நண்பர் பாரதிராஜா என்னை வாழ வைத்தவர் பாரதிராஜா.

* திரையுலகில் யாருக்கேனும் பிரச்சனை என்றால் முதல் குரல் பாரதிராஜாவிடம் இருந்து வரும்.

* பாரதிராஜாவின் புகழ் என்றென்றும் மக்கள் மனதில் நீடிக்கும்.

* விமர்சனங்களை வெளிப்படையாகக் கூறக்கூடியவர். என்னைப் பற்றி பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் பாரதிராஜா.

* அனைவரிடத்திலும் உரிமையாக பழகக்கூடியவர். உடல்நிலை சரியாகி வந்துவிடுவார் என நம்பினேன் என்றார்.

மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தலைவருமான கமல்ஹாசன், நடிகர் கவுண்டமணி, கங்கை அமரன், இயக்குநர் சங்கர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *