பாஸ்டன்:
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் சி பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி விளையாடி 1-0 என்ற கோல் கணக்கில் ஹைதியை வீழ்த்தியது.
பாஸ்டனில் நேற்று காலை 6.30 மணிக்கு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியுடன், ஹைதி அணி மோதியது.
ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து வீரர் ஜான் மெக்கின் ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
இதனால் முதல் பாதியில் 1-0 என ஸ்காட்லாந்து அணி முன்னிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
ஹைதி அணியின் வீரர்கள் கோல டிக்க முயன்றும் அவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை.
காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 10 நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே ஸ்காட்லாந்து அணி 1-0 என ஹைதி அணியை வீழ்த்தியது.