மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்….

மேஷம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

ரிஷபம்

உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மிதுனம்

நிதிநிலை உயர்ந்து நிலைமை சீராகும் நாள். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள்.

கடகம்

நல்ல தகவல் வந்து சேரும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

சிம்மம்

சலுகைகள் கிடைத்து சந்தோஷம் அடையும் நாள். தனவரவு திருப்தி தரும். எடுத்த காரியங்களை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள்.

கன்னி

வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். வரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களிடம் கோபமாக பேசிவிட்டு பின்னர் வருத்தப்படுவீர்கள்.

துலாம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடிவடையாமல் போகலாம்.

விருச்சிகம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். பயணங்களை மாற்றியமைக்க நேரிடும். பணத்தேவைகள் அதிகரிக்கும்.

தனுசு

பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். சிநேகிதர்களால் செல்வநிலை உயரும்.

மகரம்

உதாசீனப்படுத்தியவர்கள் ஓடிவந்து சேரும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். சான்றோர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.

கும்பம்

களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை.

மீனம்

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். இருப்பினும் செலவு நடைகளும் கூடும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *