சுவீடன் அணி 5-1 என்​ற கோல்​ கணக்​கில்​ அபார வெற்​றி!!

மொன்டெர்ரி:
பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் மெக்​சிகோ​வின் மொன்​டெர்​ரி​யில் உள்ள எஸ்​டாடியோ மைதானத்​தில் நேற்று ‘எஃப்’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் சுவீடன் – துனீசியா அணி​கள் மோதின.

7-வது நிமிடத்​தில் சுவீடன் முதல் கோலை அடித்​தது. லிண்​டெலோஃப் நடு​ப்பகு​தி​யில் இருந்து தூக்கி அடித்த பந்தை துனீசிய கோல்​கீப்​பர் சமாக் தனது இடத்தை விட்டு தாண்டி வெகுதூரம் முன்​னேறி வந்து தடுக்க முயன்​றார்.

ஆனால் பந்தை அவர், சரிவர தடுக்​க​வில்​லை. இதனால் அரு​கில் நின்ற விக்​டர் கியோகெரெஸ் தனது வலு​வான ஷாட் வாயி​லாக கோல் அடிக்க முயற்சி செய்தார், ஆனால் கோல் வலை​யின் முன் நின்ற துனீசிய டிஃபெண்​டர் தால்பி அதைத் தடுத்​தார்.

தால்பி மீது பட்டு திரும்பி வந்த பந்தை யாசின் அயாரி அற்புதமாக கட்​டுப்​படுத்தி மின்​னல் வேகத்​தில் உதைக்க பந்து கோல் வலை​யின் மேல் கார்​னரை துளைத்​தது.

இதனால் சுவீடன் 1-0 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை பெற்​றது. 30-வது நிமிடத்தில் சுவீடன் 2-வது கோலை அடித்​தது.

விக்​டர் கியோகெரெஸ் உதவி​யுடன் பந்தை பெற்ற அலெக்​சாண்​டர் இசாக், இடது புறத்​தில் தாழ்​வாக அடித்த ஷாட் கோலாக மாறியது. இதனால் சுவீடன் 2-0 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை பெற்​றது.

43-வது நிமிடத்​தில் துனீசியா அணி தனது முதல் கோலை அடித்தது. துனீசியா அணி​யின் வீரர் ஹன்​னி​பால் மெஜ்ப்​ரி​ அடித்த கிராஸை பெற்ற ஒமர் ரெகிக் தலை​யால் முட்டி கோல் அடித்​தார்.

முதல் பாதி ஆட்​டத்​தில் சுவீடன் 2-1 என்ற கோல் கணக்கில் முன்​னிலை​யில் இருந்​தது.

59-வது நிமிடத்​தில் பாக்ஸ் பகு​திக்கு முன்​ன​தாக துனீசி​யா​வின் எலி​யாஸ் ஸ்கிரி, சுவீடன் வீரர் அலெக்​சாண்​டர் இசாக்​கிடம் பந்தை பறி​கொடுத்​தார்.

பந்தை தட்​டிப்​பறித்த இசாக் சமயோசித​மாகச் செயல்​பட்டு அருகில் நின்ற விக்​டர் கியோகெரெஸிடம் தட்​டி​விட்​டார். அதை வாங்​கிய கியோகெரெஸ், மின்​னல் வேகத்​தில் கோல் வலைக்​குள் திணித்​தார்.

இதனால் சுவீடன் 3-1 என்ற கோல் கணக்​கில் முன்னிலை பெற்​றது. தொடர்ந்து 84-வது நிமிடத்​தில் மத்​தி​யாஸ் ஸ்வன்​பெர்க்​கும், கா​யங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட 6-வது நிமிடத்​தில் யாசின் அயாரி​யும் கோல் அடிக்க சுவீடன் அணி 5-1 என்​ற கோல்​ கணக்​கில்​ அபார வெற்​றி பெற்​றது.

துனீசியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுவீடன் அணியின் யாசின் அயாரி 2 கோல்கள் அடித்து அசத்தினார். யாசின் அயாரியின் தந்தை துனீசியா நாட்டைச் சேர்ந்தவர்.

இதற்கு மதிப்பு அளிக்கும் வகையில் முதல் கோலை அடித்ததும் அதனை யாசின் அயாரி பெரிய அளவில் ஆரவாரம் செய்து கொண்டாடவில்லை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *