(ஜூலை) 17-ந்தேதி திரையரங் குகளில் ‘அன்பே டயனா’ வெளியாக உள்ளது!!

சென்னை:
ஜமா புகழ் பாரி இளவழகன் – NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’ பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.


நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார்.

‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத்தும், படத்தின் டைட்டில் டீசரை நடிகர் விஜய் சேதுபதியும் வெளியிட்டனர்.

படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், படத்தை வெளியிடுவதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.


இந்த நிலையில், ‘அன்பே டயானா’ படத்தின் வெளியிட்டு தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஜூலை) 17-ந்தேதி உலக அளவில் திரையரங்குகளில் ‘அன்பே டயனா’ வெளியாக உள்ளது.

இதுதொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *