உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் இ பிரி​வில் குராசாவோ, ஈக்வடார் அணி​கள் மோதிய ஆட்​டம் டிரா!!

கன்​சாஸ் சிட்டி:
உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் இ பிரி​வில் குராசாவோ, ஈக்வடார் அணி​கள் மோதிய ஆட்​டம் டிராவில் முடிவடைந்​தது.

இதையடுத்து உலகக் கோப்பை கால்பந்துப் போட்​டி​யில் தனது முதலா​வது புள்​ளியை குரா​சாவோ பெற்​றுள்​ளது.

இந்த ஆட்​டம் நேற்று அதி​காலை 5.30 மணிக்கு கன்​சாஸ் சிட்டியி லுள்ள ஆரோஹெட் மைதானத்​தில் நடை​பெற்​றது. முதல் ஆட்​டத்​தில் குராசாவோ, ஜெர்​மனி​யுடன் மோதி​யது.

இதில் 7-1 என்ற கணக்​கில் ஜெர்​மனி​யுடன் படு​தோல்​வியை குரா​சாவோ அடைந்​திருந்த நிலை​யில், 2-வது ஆட்​டத்​தில் வெற்றி பெறும் நோக்கில் அந்த அணி களமிறங்​கியது.

இரு அணி வீரர்​களும் ஆரம்​பம் முதலே அதிரடி​யாக விளை​யாடி கோலடிக்க முயற்சி செய்​தனர். ஆனால் அவர்​களது கோலடிக்​கும் முயற்​சிக்கு பலன் கிட்​ட​வில்​லை.

ஈக்​வ​டார் அணி​யின் முன்கள வீரர்​கள் பலமுறை கோல்​கம்​பத்தை நோக்கி பந்தை செலுத்​தினர். ஆனால் குரா​சாவோ கோல்​கீப்​பர் எலாம் ரூம் அவற்றை அற்​புத​மாகத் தடுத்​தார்.

முதல் பாதி வரை எந்த அணி​களும் கோலடிக்​க​வில்​லை. இதையடுத்து 2-வது பாதி ஆட்​டத்​தில் இரு அணி வீரர்​களும் ஆக்​ரோஷ​மாக விளை​யாடினர்.

ஈக்​வ​டார் அணி வீரர்​கள் பல முறை கோல் வலையை நோக்கி பந்​துகளைச் செலுத்​தினர். ஆனால் அவை அனைத்​தை​யுமே அற்​புத​மாக தடுத்​தார் எலாய் ரூம்.

இறு​தி​யில் ஆட்​டம் கோலின்றி டிரா​வில் முடிந்​தது. குராசாவோ கோல்​கீப்​பர் எலாய் ரூம், 15 முறை கோல்​கள் அடிப்​ப​தைத் தடுத்து சாதனை புரிந்​தார்.

கூடு​தல் நேரம் இல்​லாத ஒரு உலகக் கோப்பை கால்​பந்து லீக் போட்​டி​யில், 1966-ம் ஆண்​டுக்​குப் பிறகு எந்​தவொரு கோல்​கீப்​பரும் செய்​த​திலேயே, எலாய் ரூம் 15 முறை கோல்களைத் தடுத்​ததே சாதனை​யாக அமைந்​துள்​ளது.

இந்த டிரா​வின் மூலம் இரு அணி​களுக்​கும் தலா ஒரு புள்ளி கிடைத்​தது. இதையடுத்து குரா​சாவோ அணி உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யில்​ முதன்​முறை​யாக ஒரு புள்​ளியைப்​ பெற்று சாதனை படைத்​துள்​ளது.

வரும்​ 26-ம்​ தேதி ஈக்​வ​டார்​, ஜெர்மனி​யுடன்​ மோதவுள்​ளது, அதே நேரத்​தில்​ கு​ரா​சாவோ, ஐவரி கோஸ்​ட்​ அணியை எதிர்​கொள்​கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *