மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்…

மேஷம்

வெளியுலக தொடர்புகள் விரிவடையும் நாள். விடியும்பொழுதே நல்ல தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்வீர்கள்.

ரிஷபம்

தொழில் போட்டிகள் அகலும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று நடைபெறும்.

மிதுனம்

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் இடமாற்றம் உறுதியாகலாம்.

கடகம்

விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.

சிம்மம்

ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஆதரவு உண்டு. பேச்சில் கனிவு பிறக்கும்.

கன்னி

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.

துலாம்

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

விருச்சிகம்

பரபரப்பாக செயல்பட்டு பாராட்டு மழையில் நனையும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

நட்பு வட்டம் விரிவடையும் நாள். கடனாக கொடுத்த தொகை வசூலாகும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும்.

மகரம்

யோகமான நாள். உறவினர் பகை அகலும். தேக நலனில் தெளிவு பிறக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.

கும்பம்

இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.

மீனம்

தனவரவு எவ்வளவு வந்தாலும் உடனுக்குடன் விரயம் ஆகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *