பக்தர்களின் குறைகளை போக்கும் அருள்மிகு மருதாசல மருதம்மா சித்தர் சமஸ்தானம்!!

இயமம்(கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம்), நியமம் (ஒழுக்க நெறி நிற்றல்), ஆசனம்(உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்), பிராணா யாமம்( சுவாசத்தைக் கட்டுப்படுத்தல்), பிரத்தியாகாரம் (புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதல்), தாரணை(பிரத்தியாகாரப் பயிற்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்), தியானம்(மனதை ஒருமுகப்படுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்), சமாதி(மனதை கடவுளிடம் நிலைக்கச் செய்வது) ஆகிய எட்டு வகையான யோகாங்கம் மூலம் சித்திகளைப் பெற்றவர்கள் “சித்தர்” என அழைக்கப்படுகின்றனர்.

சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார்.


தமிழகத்தில் சித்தர் பலர், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்தே வாழ்ந்திருந்தாலும், முதலில் அகத்தியர் பின் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர். இவரே தமிழ்ச் சித்தர் பரம்பரையின் தலைவராக விளங்குகின்றார்.

அவருக்குப்பின் காலந்தோறும் சித்தர்கள் பலர் ஆங்காங்கே தோன்றி வருகின்றனர்.

இவ்வாறு சித்தர்களாக தோன்றி ஜீவசமாதி அடைந்தவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தனவாசி ரோடு அம்மன் கோவில் தோட்டத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வரும் அருள்மிகு மருதாசல மருதம்மா சித்தர் சமஸ்தானமாகும்.

இங்கு தவத்திரு கந்தசாமிகவுண்டர் அய்யா, தவத்திரு பூவாத்தாள் அம்மை பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றனர்.

கோவிலை நிர்வகிக்கும் மூலிகை மருத்துவர் கே.சிவக்குமார் கூறியதாவது:-

அருள்மிகு மருதாசல சித்தர் சமஸ்தானத்தில் நவகிரக கணபதி விநாயகர், பகவதி அம்மா சத்ய லோக பிரம்மா, சரஸ்வதி, பண்ணாரி அம்மன், மகா மகிமை கைலாச நாதர், தட்சிணாமூர்த்தி, லிங்கோப வர், அர்த்தனாரீஸ்வரர், மகா மகிமை மருதம்மா, பிருத்திங்காதேவி, 18 கை அம்மன் துர்கை தேவ சேனாபதி, திருச்செந்தூர் முருகப்பெரு மான், அருள் மிகு ஸ்ரீ கங்காசல கல்கி, திருமலை சீனிவாசன், மகா லட்சுமி, பத்மாவதி, கால பைரவர், ஓம் ஸ்ரீ ஆஞ்ச நேயர், அருள் தரும் ஐயப்பன், வன்னி மர மகாசனி பகவான், காவல் தெய்வமாய் விளங்கும் கருப்பராய சுமாவி, கன்னிமார் தேவதைகள், 18 சித்தர்கள், வராகி தேவி ஆகிய சிலைகள் உள்ளன.

கோவிலில் உள்ள வன்னி மரத்தை வணங்குவதால் வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும், நல்ல ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும், கல்வியில் சிறந்து விளங்கவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் உதவும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும், மன அமைதியை பெறவும் உதவுகிறது.

இங்கு வரும் பக்தர்களின் மன குறைகளை அருள் மிகு மருதாசல மருதம்மா சித்தர்கள் போக்கி வருகின்றனர். கோவிலுக்கு தினசரி வரும் பக்தர்களின் திருமண தடை நீங்குகிறது.

பக்தர்களின் குடும்பபிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது. குழந்தை பாக்கியம், செல்வம் செழிப்பு மற்றும் தீராத கடன் பிரச்சனை தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

சமஸ்தானம் சார்பில் ஜாதகம், கிரஹ பிரவேசம், கும்பாபிஷேகம், வாஸ்து செய்து தரப்படும். அனைத்து விதமான நோய்களுக்கும் பரிகாரம் செய்து தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *