தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் பதவிலியிருந்து வில​கு​வ​தில் 100 சதவீதம் உறு​தி​யாக இருக்​கிறேன் – செல்வப்பெருந்தகை திட்டவட்டம்!!

சென்னை:
தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் பதவிலியிருந்து வில​கு​வ​தில் 100 சதவீதம் உறு​தி​யாக இருக்​கிறேன் என்று செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார்.

தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை மீது, கட்​சி​யினர் மத்​தி​யில் கடும் எதிர்ப்பு இருந்​தது.

இந்​நிலை​யில், கடந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக​வுடன் கூட்​டணி அமைத்​தது தவறு எனவும் விமர்​சித்து வந்​தனர்.

இந்​நிலை​யில், தேர்​தலுக்கு பிறகு கட்​சி​யின் மாநில தலை​வர் பதவியி​லிருந்து வில​கு​வ​தாக செல்​வப்​பெருந்தகை அறி​வித்​திருந்​தார்.

இதுதொடர்​பாக நேற்று செய்​தி​யாளர்​கள் எழுப்​பிய கேள்விக்கு அவர் பதில் அளித்​த​தாவது:

நான் தேர்​தல் நடப்​ப​தற்கு முன்​பே, வாக்​காளர்​கள் மற்​றும் பத்​திரி​கை​யாளர் மத்​தி​யில் “தேர்​தல் முடிந்​தவுடன் நான் தலை​வர் பதவி​யில் நீடிக்க மாட்​டேன்” என்று ஒப்​புதல் வாக்​குமூலம் கொடுத்​திருக்​கிறேன்.

இதில் என்ன சந்​தேகம் இருக்​கிறது. பதவி வில​கு​வ​தில் 100 சதவீதம் உறு​தி​யாக இருக்​கிறேன்.

எல்​லோருக்​கும் ஒரு காலத்​தில் காங்​கிரஸ் மாநில தலை​வ​ராக பணி​யாற்ற வேண்​டும் என்ற ஆசை இருக்​கும். பதவி கிடைத்த பிறகு மனநிறைவோடு வில​கி​விட வேண்​டும்.

இதை நான் மனநிறைவோடு தேர்​தலுக்கு முன்பே தெரி​வித்​து​விட்​டேன். அதற்கு காரணமாக, சில சங்​கடங்​களும், மனக்​கசப்​பும் இருக்​கின்றன.

அதற்​கான வாய்ப்பு வரும்​போது அது குறித்து மனம் திறந்து பேசுவேன். அதற்​காக யாரை​யும் கொச்​சைப்​படுத்​தி, சங்​கடப்​படுத்​தி, பேசும் ஆள் நான் இல்​லை.

கடந்த வாரம் ஞாயிற்​றுக்​கிழமை தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்​கேவை சந்​தித்​த​போது, என்னை மாநில தலை​வர் பதவியி​லிருந்து விடுவிக்​கு​மாறு கோரிக்கை வைத்​தேன்.

நான் பதவி விலக வேண்​டும் என்று எந்த நெருக்​கடி​யும் இல்லை. பதவில் இருப்​பதை விட, பதவி​யில் இல்​லாத போது தான் மகிழ்ச்​சி​யாக இருப்​போம்.

அடுத்த மாநில தலை​வரை அகில இந்​திய தலை​மை தான்​ முடிவு செய்​யும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *