உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி; கொலம்பியா, போர்ச்சுகல் தகுதி!!

மியாமி:
உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் குரூப் பிரிவு லீக் ஆட்​டத்​தில் போர்ச்சுகல் அணி​யுடன் கொலம்​பியா அணி டிரா செய்​தது. இருந்​த​போதும் இரு அணி​களும் நாக்​-அவுட் சுற்​றுக்கு முன்​னேறின.

இந்த ஆட்​டம் மியாமி​யிலுள்ள ஹார்ட் ராக் மைதானத்​தில் நேற்று அதி​காலை 5 மணிக்கு தொடங்​கியது. இரு அணி வீரர்​களும் தொடக்​கம் முதலே கோலடிக்க தீவிர​மாக முயற்சி செய்​தனர்.

ஆனால் அவர்​களது முயற்​சிகளை கோல்​கீப்​பர்கள் சிறப்​பாக தடுத்​தனர். ஆட்​டம் முடி​யும் வரை இரு அணி​களுமே கோலடிக்கவில்​லை. இதனால் ஆட்​டம் 0-0 என்ற கணக்​கில் டிராவில் முடிவடைந்​தது.

குரூப் கே சுற்று லீக் ஆட்​டங்​களின் முடி​வில் கொலம்​பியா 7 புள்ளிகள், போர்ச்​சுகல் 5, காங்கோ 4 புள்​ளி​கள் பெற்று நாக்​-அவுட் சுற்​றுக்கு முன்​னேறின.

ரொனால்டோ சாதனை

கொலம்பியாவுடனான போட்டி ரொனால்டோவுக்கு 25-வது உலகக் கோப்பை போட்​டி​யாக அமைந்​தது.

இதன்​மூலம் அதிக உலகக் கோப்பை போட்​டிகளில் விளை​யாடிய 2-வது வீரர் என்ற சாதனையை ஜெர்மனி வீரர் லோத்​தர் மத்​தேயஸுடன் பகிர்ந்​து​கொண்​டுள்​ளார் ரொனால்​டோ.

இந்த பட்டியலில் மெஸ்ஸி 29 ஆட்​டங்​களில் பங்​கேற்று முதலிடத்​தில் உள்​ளார்.

9 ஆப்​பிரிக்க அணி​கள்

இந்த உலகக் கோப்​பை​யில் நாக்​-அவுட் சுற்​றுக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மொராக்​கோ, தென் ஆப்​பிரிக்​கா, செனகல், ஐவரி கோஸ்ட், கானா, எகிப்​து, அல்​ஜீரி​யா, காங்​கோ, கேப் வெர்டே ஆகிய 9 அணி​கள் நாக்​-அவுட் சுற்​றில்​ தடம்பதித்துள்ளன. வெளி​யேறிய ஒரே ஒரு ஆப்பிரிக்க அணி துனிசி​யா மட்​டுமே.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *