ஷாருக்கானிடம், என் கணவ ரைவிட உங்களை மிகவும் நேசிக்கிறேன்!! பெண் ரசிகை ஒருவர்…..

சென்னை:
இந்திய திரை உலகில் பிரபல நடிகரான ஷாருக்கான் மங்களூரில் ஒரு விழாவில் பங்கேற்றார். விழாவில் தனது பிரபலமான சில பாடல்க ளுக்கு நடனமாடியதுடன் பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.


அப்போது பெண் ரசிகை ஒருவர் ஷாருக்கானிடம், ‘என் கணவரைவிட உங்களை மிகவும் நேசிக்கிறேன்’ என கூறினார்.

இதைக் கேட்ட ஷாருக்கான் புன்னகைத்தபடி, ‘இதை நீங்கள் என்னிடம் தனியாக சொல்லி இருக்கலாம்’ என்று நகைச்சுவையோடு பதில் அளித்தார்.

தொடர்ந்து ரசிகையிடம் பேசிய ஷாருக்கான், இது பேச்சுரிமை சம்பந்தப்பட்ட விஷயம்.

உங்கள் உணர்வுகளையும் நான் புரிந்து கொள்கிறேன். உங்கள் கணவரும் அவ்வாறே உணர்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

உங்களையும், உங்கள் கணவரையும், குடும்பத்தையும் நான் நேசிக்கிறேன்.

மிக்க நன்றி’ என கூறினார். ஷாருக்கானின் இந்த சமயோசிதமான மற்றும் கலகலப்பான பேச்சு அங்கிருந்தவர்களின் பலத்த கைத்தட்டல்களைப் பெற்றது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *