மேஷம்
மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெற வழிபிறக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். இடையூறு சக்திகள் வந்து சேரும். தொழில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். பணம் வந்த நிமிடமே செலவாகும்.
மிதுனம்
குழப்பங்கள் தீரும் நாள். தொழில் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும். உங்கள் கருத்தை எதிர்த்தவர்கள் இப்போது ஏற்றுக்கொள்வார்கள்.
கடகம்
பொருளாதார நெருக்கடி அகலும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய இனிய செய்தி வந்து சேரும். சொத்துகள் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
சிம்மம்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் உடன் இருப்பவரை அனுசரித்து செல்வது நல்லது.
கன்னி
மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. பயணத்தால் விரயமுண்டு. பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கும் அமைப்பு உண்டு.
துலாம்
முயற்சி கைகூடும் நாள். முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக்கொள்வது நல்லது. பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
விருச்சிகம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். பிரபலங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
தனுசு
புதிய பாதை புலப்படும் நாள். உங்களுக்கு எதிராக போர்க்கொடி காட்டியவர்கள் இப்பொழுது மனம் மாறுவர். தொழில் வெற்றி நடைபோடும்.
மகரம்
யோகமான நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தனவரவு வந்து சேரும். குழந்தைகளின் சுபகாரிய பேச்சுகள் கைகூடும்.
கும்பம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். வருமானம் உயரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மீனம்
நட்பால் நன்மை கிட்டும் நாள். நல்ல தகவல் இல்லம் தேடி வரும். மனதில் உற்சாகம் பிறக்கும். வீண் குற்றச்சாட்டுகள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.