அனிருத்தின் அதிரடித் திரைப் படங்களின் பட வரிசை!!

சென்னை:
இந்தியாவின் முன்னணித் திரைப்பட இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகருமானஅனிருத் 2012-ஆம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.


இதனைத்தொடர்ந்து கத்தி, வேலையில்லா பட்டதாரி, நானும் ரவுடி தான், மாஸ்டர், விக்ரம், ஜெயிலர் போன்ற முக்கிய திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்தார்.

இந்தியில் ஜவான், தெலுங்கில் தேவரா போன்ற முன்னணி திரைப்படத்திலும் இவர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து மாஸ் ஹிட் பாடல்களை வழங்கி வரும் அனிருத், அடுத்தடுத்து வரும் திரைப்படங்களின் மூலம் திரையுலகில் ஆதிக்கம் செலுத்த முழுவீச்சில் தயாராகி வருகிறார்.
அனிருத்தின் திரைப்படங்களின் வரிசை!

அனிருத்தின் அதிரடித் திரைப்படங்களின் வரிசை இதோ…
அரசன், TheParadise, AA23, KHxRK, DC, ஜெயிலர்2, King ஆகிய திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.

இப்படங்களுக்கான அறிவிப்புத் தீம்கள் முன்னதாக வெளியிடப் பட்டன. அவை ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இது தொடர்பான எதிர்பார்ப்புகள் மேலும் அ திகரித்தது உள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *