‘தர்மன்’ படத்தில் முக்கியத்துவமும் நிறைந்த கதாபாத்திரத்தில் அவருடன் மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சிய டைகிறேன் – சிம்ரன் !!

சென்னை:
முப்பது வருடங்களாகத் திரைப்படங்களில் நடித்து வரும் சிம்ரன், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

இப்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் ராஷி கன்னா, யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பது பற்றி சிம்ரன் கூறும்போது, ”சில கனவுகள் நனவாக சரியான நேரம் அமைய வேண்டும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று.

அது ‘பேட்ட’ படத்தில் நிறைவேறியது. இப்போது ‘தர்மன்’ படத்தில் முக்கியத்துவமும் நிறைந்த கதா பாத்திரத்தில் அவருடன் மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

என் திரைப்பயணம் முழுவதும் எனக்கு மாறாத அன்பையும் ஆதரவையும் வழங்கி வரும் என் ரசிகர்களுக்கு நன்றி.

‘கேளுங்கள், நம்புங்கள், இந்த பிரபஞ்சம் நீங்கள் நினைக்காத விதத்தில் பதிலளிக்கும்’ என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு.

நன்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த மனதுடன் இந்த அழகான புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *