பிஃபா தலை​வர் கூட செல்​வாக்கு செலுத்த முடி​யாது; நடுவர்களின் நேர்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது – நடுவர் குழுத் தலைவர் விளக்கம்!!

அட்லான்டா:
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்​கில் எகிப்து அணியை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது.

இந்த ஆட்டத்​தில் 62-வது நிமிடத்​தில் எகிப்​தின் மொஸ்​டபா ஜிகோ அடித்த கோல் நிராகரிக்​கப்​பட்​டது. கோல் அடிப்​ப​தற்​கான முன்னெடுப்​பின் போது அர்​ஜெண்​டினா அணி​யின் டிஃபென்​டர் லிசாண்ட்ரோ மார்​டினெஸ் காலை எகிப்​தின் மர்​வான் அத்​தியா மிதிப்​பது கண்​டறியப்​பட்​டது.

இதனால் விஏஆர் தொழில்நுட்​பத்​தின் உதவி​யுடன் மறுஆய்வு செய்து ஜிகோ அடித்த கோல் ரத்து செய்​யப்​பட்​டது. அதேவேளையில் ஆட்​டத்​தின் 92-வது நிமிடத்​தில் எகிப்து அணியின் வீரர் முகமது சாலாவை அர்​ஜெண்​டினா அணி​யின் வீரர் ஜூலியன் ஆல்​வரெஸ் ஃபவுல் செய்​தார். இதை களநடு​வர் கண்​டறிய​வில்​லை.

விஏஆர் தொழில்​நுட்​பம் தலை​யிட​வில்​லை. இந்த இரு நிகழ்​வு​களும் போட்​டி​யின் முடி​வில் தாக்​கத்தை ஏற்படுத்​தி​யது என்று எகிப்து அணி​யின் பயிற்​சி​யாள​ரும், அந்நாட்டு கால்​பந்து சங்​க​த்தினரும் குற்​றம் சாட்​டினர். இது தொடர்​பாக பிஃ​பா​விடம் புகாரும் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் இந்த விவ​காரம் தொடர்​பாக ஃபிஃபா நடு​வர் குழுத் தலை​வர் பியர்லூகி கொலினா கூறிய​தாவது:

ஒவ்​வொரு கோல் அடிக்​கப்​பட்ட பிறகும், விஏஆர் தொழில்​நுட்​பம் கொண்டு பந்து எவ்​வாறு வசப்​படுத்​தப்​பட்டு கடத்​தப்​படுகிறது என்​பது குறித்து ஆய்வு செய்​யப்​படும்.

கோல் அடிக்​கப்​படு​வதற்கு முந்​தைய கட்​டத்​தில் ஏதேனும் ஃபவுல் நடந்​திருப்​பது கண்​டறியப்​பட்​டு, அது கோல் அடிக்​கப்​பட்​ட​தில் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​ய​தாகக் கருதப்​பட்​டால், கள நடு​வர் அதை மீண்​டும் சரி​பார்க்க விஏஆர் தொழில்​நுட்​பத்தை பரிந்​துரைப்​பார்.

சம்​பந்​தப்​பட்ட அந்த ஃபவுல் நிகழ்​விற்​கும் கோல் அடிக்​கப்​பட்​டதற்​கும் இடையே உள்ள தூரம் அல்​லது நேரத்​தின் அளவு குறித்து எந்​தவொரு வரையறை​யும் இல்​லை.

அந்த வகை​யில் எகிப்து வீரர் மார்​வன் அட்​டி​யா, அர்​ஜெண்​டி​னா​வின் லிசாண்ட்ரோ மார்​டினெஸின் காலைத் தெளி​வாக மிதித்​துள்​ளார். ஃபவுல் என்​றால் அது ஃபவுல் தான் என்று நாங்​கள் நம்​பு​கிறோம்.

அந்த ஃபவுல் ‘வெளிப்​படை​யான​தாக’ தெரிந்​தா​லும் தெரி​யா​விட்​டாலும், களத்​தில் உள்ள நடு​வர் அதைக் கவனிக்​கத் தவறி​யிருந்​தால், விஏஆர் தலை​யிட முடி​யும்.

கோல் அடிக்​கப்​படு​வதற்கு முந்​தைய ஆட்ட உரு​வாக்​கத்​தில் எந்​தவொரு ஃபவுலும் கண்​டறியப்​பட​வில்லை எனில், விஏஆர் அதற்கு ஏற்ப நடு​வருக்​குத் தகவல் தெரிவிக்​கும்.

எதிரணி வீரரின் காலில் மிதிப்​பது ஃபவுல் ஆகும், அதே நேரத்​தில் டிஃபெண்​டர் பந்தை முதலில் தொட்ட பிறகு, எதிரணி வீரருடன் ஏற்​படும் சாதாரண கால்​பந்து தொடர்பு ஃபவுலாகக் கருதப்​ப​டாது.

இதற்கு சிறந்த உதா​ரணம் அதே போட்​டி​யின் இறு​தி​யில் நிகழ்ந்​தது. எகிப்து அணி​யின் வீரர் முகமது சாலா, அர்​ஜெண்​டினா அணி​யின் வீரர் ஜூலியன் ஆல்​வரெஸ் ஆகியோ​ருக்கு இடையே ஏற்​பட்​டது .

சாதாரண கால்​பந்து தொடர்​பு​தான் என்று கள நடு​வரும் விஏஆர் தொழில்​நுட்​ப​மும் கரு​தி​யது. போட்​டி​யின் போது எடுக்​கப்​பட்ட முடிவு​கள் தொடர்​பான விவாதங்​கள் ஆக்​கப்​பூர்​வ​மான​தாக இருக்க வேண்​டும்.

இது எப்​போதும் கால்​பந்​தின் ஒரு பகு​தி​யாகவே இருக்​கும், ஆனால் ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களுக்கு கால்​பந்து விளை​யாட்​டில் இடமில்​லை. பிஃபா உலகக் கோப்பை போட்டி நடு​வர்​களின் நேர்​மையை யாரும் கேள்வி கேட்க முடி​யாது. அதே​போல், பிஃபா நடு​வர் குழுவை யாராலும் கட்​டுப்​படுத்த முடி​யாது.

பிஃபா தலை​வர் கூட செல்​வாக்கு செலுத்த முடி​யாது. பிஃபா தலை​வர் எங்​களை முழு சுதந்​திரத்​துடன் செயல்பட அனு​ம​தித்​துள்​ளார்.

எங்​களது குழு​வுக்கு அவர், எப்​போதும் தனது முழு ஆதரவை வழங்கி வரு​கிறார். போட்டி நடு​வர்​கள் நேர்​மை​யான முடிவு​களை எடுக்​கிறார்​கள்.

வீரர்​கள் மற்​றும் பயிற்​சி​யாளர்​களைப் போலவே அவர்​களும் தங்​களின் சிறந்த பங்​களிப்​பை வழங்​கவே முயற்​சிக்​கிறார்​கள்​. இவ்​வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *