உதயநிதி ஸ்டாலின் லண்டன் பயணம்… !!

சென்னை:
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 4-ந்தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். 2 வார பயணமாக அவர் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் சென்றார்.

மு.க.ஸ்டாலின் பேரனும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மகனுமான இன்பநிதி லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்புடைய பட்டப்படிப்பை படித்து முடித்துள்ளார்.

அவருக்கு பட்டம் வழங்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்று அங்கு ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

காலை 9.50 மணிக்கு புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் வழியாக லண்டன் போய் சேருகிறார். அவர் உட்பட 10 குடும்ப உறுப்பினர்கள் அவருடன் சென்று உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்.

வருகிற 18-ந் தேதி மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினர் சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *