கொளத்​தூரில் 6 மாதக் குழந்​தைக்கு பாஸ்​போர்ட் வழங்​கி சேவை மையத்தை தொடங்கி வைத்​த எல்.முருகன் !!

சென்னை: ​
கொளத்​தூரில் உள்ள அஞ்சல் நிலைய அலு​வல​கத்​தில் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள பாஸ்​போர்ட் சேவை மையத்தை மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் திறந்து வைத்​தார்.

மின்​னணு பணப் பரிவர்த்​தனை​யில் உலக நாடு​களுக்கு முன்​னோடி​யாக இந்​தியா திகழ்​கிறது என்று அவர் தெரி​வித்​தார்.

சென்னை கொளத்​தூரில் உள்ள அஞ்​சல் நிலைய அலு​வல​கத்​தில் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள பாஸ்​போர்ட் சேவை மையத்தை மத்​திய தகவல் ஒலிபரப்​பு, நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் நேற்று திறந்து வைத்​தார்.

6 மாதக் குழந்​தைக்கு பாஸ்​போர்ட் வழங்​கி, இந்த அஞ்​சல​கத்​தின் பாஸ்​போர்ட் சேவையை தொடங்கி வைத்​தார். நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது:

வங்​கி, காப்​பீடு, ஆதார் என மக்​களுக்​குத் தேவை​யான அனைத்து சேவை​களும் அஞ்​சல் நிலை​யங்​களில் கிடைக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

மத்​தி​யில் பிரதமர் மோடி தலை​மையி​லான அரசு கடந்த 2014-ம் ஆண்டு ஆட்​சிப் பொறுப்​பேற்​றது முதல், அரசுத் திட்​டங்​களின் பயன்​கள் எந்​த​வித இடைத்​தரகரும் இல்​லாமல் நேரடி​யாக மக்​களின் வங்​கிக் கணக்​கு​களில் சென்​றடைகின்​றன.

கடந்த 12 ஆண்​டு​களில் 58 கோடிக்​கும் அதி​க​மான ஜன்​தன் வங்​கிக் கணக்​கு​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

அதே​போல, சமூகநலத் திட்​டங்​களின் பயன்​கள் அனைத்துத் தரப்பு மக்​களை​யும் சென்​றடைய வேண்​டும் என்ற இலக்​குடன் மத்​திய அரசு பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறது.

மின்​னணு பணப் பரிவர்த்​தனை​யில் உலக நாடு​களுக்கு முன்​னோடி​யாக இந்​தியா திகழ்​கிறது. உள்​கட்​டமைப்பு வசதி​களை உலகத் தரத்​துக்கு மேம்​படுத்த வேண்​டும்.

இதன்​மூலம் இந்​தியா 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ச்​சி​யடைந்த நாடாக உரு​வெடுக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்த நிகழ்ச்​சி​யில் சென்னை மேயர் பிரி​யா, வடசென்னை எம்​.பி.கலாநிதி வீராசாமி, கொளத்​தூர் சட்​டப்​பேரவை உறுப்​பினர் வி.எஸ்​.​பாபு (தவெக), வெளி​யுறவு அமைச்சக இணைச் செய​லா​ளர் ஈஷா ஸ்ரீவத்​சா, தமிழக வட்ட முதன்மை அஞ்​சல் துறை தலை​வர் மரி​யம்மா தாமஸ், சென்னை மண்டல பாஸ்​போர்ட் அலு​வலர் ஆர்​.​ விஜயகு​மார்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *