தமிழகத்​தின் உள் மாவட்​டங்​களில் இன்​று​ முதல் 21-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் உயரக்​கூடும்!! வானிலை ஆய்வு மையம்….

சென்னை:
தமிழகத்​தின் உள் மாவட்​டங்​களில் இன்​று​முதல் 21-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் உயரக்​கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

தமிழகத்​தில் இன்று (ஜூலை 18) மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் வட கடலோர தமிழகத்​தி​லும், 19-ம் தேதி மேற்​குத் தொடர் ச்சி மலை மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் பலத்த காற்​றுடன் கூடிய மித​மான மழை பெய்​யக்​கூடும். இதர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும்.

இன்​று​முதல் 21-ம் தேதி வரை உள்​தமிழகத்​தில் அதி​கபட்ச வெப்​பநிலை ஒருசில இடங்​களில் வழக்​கத்​தை​விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும்.

மாலை அல்​லது இரவு நேரங்​களில் நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான அல்​லது மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இத்தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *