கோலாகலமாக தொடங்கியது கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டி!!

கிளாஸ்கோ:
23-வது காமன்​வெல்த் விளை​யாட்டு போட்டி ஸ்காட்​லாந்​தில் உள்ள கிளாஸ்கோ நகரில் உள்ள ஓவோ ஹைட்ரோ மைதானத்​தில் இந்​திய நேரப்​படி நேற்று அதி​காலை கோலாகல​மாக தொடங்​கியது.

தொடக்க விழா​வானது இசை மற்​றும் ஸ்காட்​லாந்து பாரம்​பரியப் பெரு​மை​கள் நிறைந்த வண்​ணங்​களின் கலவை​யாக மாறி​யிருந்​தது.

பிரிட்​டன் மன்​னர் மூன்​றாம் சார்​லஸ் மற்​றும் அரசி கமிலா ஆகியோர் விழா​வில் கலந்து கொண்​டனர். மூன்​றாம் சார்​லஸ் போட்​டிகளை முறைப்​படி தொடங்கி வைத்​தார்.

கிளாஸ்கோ காமன்​வெல்த் விளை​யாட்​டில் 74 நாடு​களைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொண்​டுள்​ளனர்.

தொடக்க விழா​வானது பிரம்​மாண்​ட​மான திறந்​தவெளி மைதான நிகழ்​வு​களி​லிருந்து மாறு​பட்டு 14,300 பேர் அமரக்​கூடிய உள்​அரங்​கிற்​குள்​ளேயே முழு​மை​யாக நடத்​தப்​பட்​டது. இந்த முறை​யில் தொடக்க விழா நடத்​தப்​படு​வது காமன்​வெல்த் விளை​யாட்டு வரலாற்​றிலேயே இதுவே முதல்​முறை​யாகும்.

மற்​றொரு முன்​னோடி நிகழ்​வாக, 74 நாடு​களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்​கள் நிகழ்ச்​சி​யின் இறு​தி​யில் அணிவகுத்து வரு​வதற்​குப் பதிலாக, தொடக்​கத்​திலேயே அரங்​கிற்​குள் அணிவகுத்து வந்​தனர்.

இந்​திய தேசி​யக் கொடியை ஒலிம்​பிக்​கில் பதக்​கம் வென்ற மீரா​பாய் சானு, லோவ்​லினா போர்​கோஹெய்ன் ஆகியோர் ஏந்தி வந்​தனர். இந்​திய வீரர்​கள் அடர் நீல நிற சூட்​களி​லும், வீராங்​க​னை​கள் புடவை மற்​றும் பிளேசர்​கள் அணிந்​திருந்​தனர்.

போட்​டி​யின் 2-வது நாளான நேற்று நீச்​சலில் ஆடவருக்​கான 50 மீட்​டர் பேக்​ஸ்​டிரோக் பிரிவு ஹீட்​ஸில் இந்​தி​யா​வின் ஸ்ரீஹரி நடராஜ் பந்தய தூரத்தை 25.52 விநாடிகளில் கடந்து தனது பிரி​வில் 8-வது இடம் பிடித்​தார். அதேவேளை​யில் ஒட்​டுமொத்​த​மாக பெர்​மு​டா​வின் ஜேக் ஹார்​வி​யுடன் 14-வது இடத்தை பகிர்ந்து கொண்ட ஸ்ரீஹரி நடராஜ் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

ஹீட்​ஸில் 16 இடங்​களுக்​குள் வருபவர்​கள் அரை இறு​திக்கு தகுதி பெறு​வார்​கள்.

பாரா நீச்​சலில் 100 மீட்​டர் ஃப்​ரீஸ்​டைல் எஸ் 13 பிரி​வில் இந்​தி​யா​வின் புதி​கி​னா, இமாம் அலி ஆகியோர் இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்​றனர்.

புதி​கினா தனது ஹீட்​ஸில் பந்தய தூரத்தை 57.10 வி​நாடிகளில் கடந்து 3-வது இடத்தை பிடித்​திருந்​தார். இமாம் அலி பந்​தய தூரத்​தை 1:05.32 வி​நாடிகளில்​ அடைந்​திருந்​தார்​.

கிளாஸ்கோ காமன்​வெல்த் விளை​யாட்டு போட்​டிக்​கான இந்​திய அணி​யில் இடம் பெற்​றிருந்த ஜூடோ வீராங்​க​னை​யான துலிகா மான் தற்​காலிக​மாக இடைநீக்​கம் செய்​யப்​பட்​டு, காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டியி​லிருந்து விலக்​கப்​பட்​டுள்​ளார்.

தேசிய ஊக்​கமருந்து தடுப்பு முகமை​யின் விதி​முறை​களின்​படி, 12 மாத காலத்​துக்​குள் 3 முறை சோதனைக்​கான இருப்​பிட விவரங்​களை பதிவு செய்ய வேண்​டும்.

இதை செய்​யத் தவறிய​தால் துலிகா மான் மீது இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. ஏற்​கெனவே ஆடவர் அணி​யில் அருண் குமார் நீக்​கப்​பட்ட நிலை​யில் தற்​போது பதக்​கம் வெல்​லக்​கூடிய நம்​பிக்கை நட்​சத்​திர​மான துலிகா மானும் நீக்​கப்​பட்​டுள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *