டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீட்​டர் சுற்​றளவுக்​குள் எங்கு வேண்​டு​மா​னாலும் பார் அமைக்​கலாம்; அரசு உத்தரவு….

சென்னை: ​
டாஸ்​மாக் மது​பானக் கடைகளுடன் இணைந்து செயல்​படும் பார்​களுக்கு சில விதி​களில் அரசு தளர்வு அளித்து அறி​வித்​து உள்​ளது.

தமிழகத்​தில் 4 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட டாஸ்​மாக் கடைகள் இயங்கி வரு​கின்​றன.

டாஸ்​மாக் மது​பானக் கடை அமைந்​துள்ள அதே கட்​டிடத்​தில் மட்​டுமே பார் செயல்பட இது​வரை அனு​மதி வழங்​கப்​பட்டு வந்​தது.

மேலும், பாருக்​கான டெண்​டர் எடுப்​பவர்​கள் அந்த கட்​டிட உரிமை​யாளரிடம் இருந்து தடை​யில்​லாச் சான்​றிதழ் பெற்​று, அதை டாஸ்​மாக் நிர்​வாகத்​திடம் சமர்ப்​பித்து வந்தனர்.

இதனால், குறிப்​பிட்ட கட்​டிடஉரிமை​யாளரின் ஒப்​புதலைப் பெறு​பவர்​களுக்கு மட்​டுமே டெண்​டரில் பங்​கேற்​கும் வாய்ப்பு இருந்​தது.

இந்த நிலையை மாற்​றும் வகை​யில் புதிய விதி​களின்​படி சில தளர்​வு​களை அறி​வித்து தமிழக அரசு அரசிதழில் வெளி​யிட்​டுள்​ளது. இதுகுறித்து அரசிதழில் கூறி​யிருப்​ப​தாவது:

மது​பான பார்​களை இனி டாஸ்​மாக் சில்​லறை விற்​பனைக் கடை​யின் வளாகத்​துக்​குள் மட்​டுமே அமைக்க வேண்​டும் என்ற கட்​டுப்​பாடு இனி இல்​லை.

அதற்கு பதிலாக, கடை​யின் 100 மீட்​டர் சுற்​றளவுக்​குள் எங்கு வேண்​டு​மா​னாலும் அமைக்​கலாம்.

மேலும், ஒரு பாருக்கு தேவை​யான குறைந்​த​பட்ச பரப்​பள​வாக 15 சதுர மீட்​டர் இருந்த நிலை​யில் அது 20 சதுர மீட்​ட​ராக (சு​மார் 205 சதுர அடி) மாற்​றப்​படு​கிறது.

இதன்​மூலம் பார் டெண்​டர் போட்​டி​யில் யார் வேண்​டு​மா​னாலும் கலந்​து ​கொள்ள ஏது​வாக இருக்​கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *