கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர் 49 கிலோ பளுதூக்​குதல் பிரி​வில் இந்​திய வீராங்​கனை மீராபாய் சானு தங்​கம் வென்​று வரலாற்​றுச் சாதனை!

கிளாஸ்கோ:
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர் 49 கிலோ பளுதூக்​குதல் பிரி​வில் இந்​திய வீராங்​கனை மீராபாய் சானு தங்​கம் வென்​றார்.

காமன்வெல்த் போட்​டி​யில் தொடர்ச்​சி​யாக 3-வது முறை​யாக தங்​கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்​துள்​ளார் மீரா​பாய் சானு.

பிரிட்​டனின் கிளாஸ்கோ நகரில் காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகள் நடை​பெற்று வரு​கின்​றன.

நேற்று நடை​பெற்ற மகளிர் 48 கிலோ எடைப்​பிரிவுப் போட்​டி​யில் மீரா​பாய் சானு, ஸ்னாட்ச் பிரி​வில் 85 கிலோ​வும், கிளீன் அன்ட் ஜெர்க்​கில் 105 கிலோ தூக்கியும் முதலிடத்​தைப் பிடித்து தங்​கம் வென்​றார்.

இதன்​மூலம் காமன்​வெல்த் போட்​டிகளில் மீரா​பாய் சானு தொடர்ச்​சி​யாக 3-வது முறை​யாக தங்​கம் வென்று வரலாற்​றுச் சாதனை படைத்​தார்.

மேலும் ஸ்னாட்ச் பிரி​வில் 85 கிலோ தூக்கி காமன்​வெல்த் போட்​டி​யில் புதிய சாதனையை​யும் அவர் படைத்​துள்​ளார். இதற்கு முன்பு 2018, 2022 காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகளி​லும் மீரா​பாய் சானு தங்​கம் வென்​றிருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதே பிரி​வில் நைஜீரிய வீராங்​கனை ரூத் அசுக்​குவோ நியாங் வெள்​ளி​யும், மலேசி​யா​வின் ஐரீன் ஜேன் ஹென்றி வெண்​கல​மும் வென்​றனர்.

ரிஷிகண்டா சிங்​குக்கு வெள்ளி

நேற்று நடை​பெற்ற ஆடவர் 60 கிலோ பளுதூக்​குதல் போட்​டி​யில் இந்​திய வீரர் சனம்​பம் ரிஷிகண்டா சிங் பங்​கேற்​றார்.

இதில் அவர் மொத்​த​மாக 264 கிலோ​வைத் தூக்கி (ஸ்​னாட்ச் பிரி​வில் 121 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரி​வில் 143 கிலோ) 2-வது இடத்​தைப் பிடித்து வெள்​ளியைத் தட்​டிச் சென்​றார்.

இதே பிரி​வில் மலேசிய வீரர் முகமது அனிக் கஸ்​டான் 273 கிலோ தூக்கி தங்​கப் பதக்​கத்​தை​யும், கென்ய வீரர் ஜோஷுவா மபோயா 260 கிலோ தூக்கி வெண்​கலத் பதக்​கத்​தை​யும் வென்​றனர்.

இதன்​மூலம்​ இந்​த கிளாஸ்​கோ காமன்​வெல்த்​ விளை​யாட்​டுப்​ போட்​டி​யில்​ இந்​தி​யா வெல்​லும்​ முதல்​ வெள்​ளிப்​ பதக்​க​மாக இது அமைந்​துள்ளது.

லான் பவுல்ஸ் ரூபா, பிங்கி தோல்வி

கிளாஸ்கோ காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டி​யின் லான் பவுல்ஸ் பிரி​வில் இந்​திய வீராங்​க​னை​கள் ரூபா ராணி திர்க்​கி, பிங்கி சிங் ஆகியோர் தோல்வி கண்​டனர்.

நேற்று நடை​பெற்ற நமீபி​யா​வுக்கு எதி​ரான மகளிர் ஜோடி செக்​சனல் பிரிவு ஆட்டத்தில் ரூபா ராணி-பிங்கி சிங் ஜோடி 0-3 என்ற கணக்​கில் தோல்வி அடைந்​தது.

ஆடவர் தனி​நபர் பிரி​வில் இந்​தி​யா​வின் புதுல் சோனோ​வால் 4-8, 8-9 என்ற கணக்​கில் மலேசி​யா​வின் இஸ்ஸத் ஷமீர் டிசுல்​கெப்​ளே​விடம் தோல்வி கண்​டார்.

4×200 தொடர் நீச்சல்

அதேநேரத்தில் 4×200 மீட்டர் தொடர் நீச்சல் ஃப்ரீஸ்டைல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தக்சன் சசிக்குமார், அனீஷ் சுனில் குமார் கவுடா, ஆர்யன் நெஹ்ரா, ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி முன்னேற்றம் கண்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *