தெறிக்கும் ரத்தமும் தாலாட்டும் இசையும்; லோகேஷ் கனகரா ஜின் ‘டிசி’ கவனம் ஈர்த்த ட்ரெய்லர்!!

சென்னை:
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

நீண்டு கிடக்கும் நீர் பரப்பில் தண்ணீர் சலசலக்க ஒருவர் நடந்து வருகிறார். திரையில் ஒரு காவல் அதிகாரியின் குரல் ஒலிக்கிறது. மெல்ல இசை சாஸ்த்ரிய சங்கீதத்துக்கு மாற, ஓடும் காட்சிகளில் வன்முறை தெறிக்கிறது.

இரண்டரை நிமிட ட்ரெய்லரில் கண்மண் தெரியாமல் எல்லாரும் சுடுகின்றனர், இல்லையெனில் கத்தியால் குத்துகின்றனர்.

‘தெரிஞ்சவங்கள விட தெரியாதவங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லலாம்’, ‘தப்பு பண்ணுனவங்களை திருத்த வேண்டிய போலீஸே தப்பு பண்ணினா’ போன்ற வசனங்களும், இசையும் படத்துக்கான எதிர்பார்ப்பை கூட்டுகின்றன.

இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜுடன் வாமிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *