சென்னை:
கூடுதல் மின் கட்டணம் என 3.70 லட்சம் பேர் புகார் தெரிவித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
சமூக வலைத்தளத்தில் வரும் தகவல்களை வைத்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அது தவறான தகவல். வாட்ஸ் அப் மூலம் யாரோ கூறும் தகவல்களை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பக்கூடாது.
திமுக ஆட்சியில் 11.50 லட்சம் பேருக்கு 3 மடங்கு கட்டணம் வந்தது தற்போது 9 லட்சம் பேருக்கு 3 மடங்கு கட்டணம் வந்துள்ளது. இதுகுறித்த ரொட்டீன் செக் அப் செய்கிறோம்.
மின் கட்டணம் உயர்வு என வதந்தி பரவுகிறது. வெயில் காலத்தில் அதிகளவு ஏசி பயன்படுத்துவதால் கட்டணம் உயர்கிறது.
கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு குறைவான நபர்களுக்கு தான் மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளது. மின் பயன்பாடு அதிகரிக்கும் போது மின் கட்டணம் அதிகரித்து வரத்தான் செய்யும்.
மேகதாது பிரச்சனை இரு மாநிலம் விவகாரம் என்பதால் முதல மைச்சர் அனைத்து தரப்பு ஆலோசனைகளையும் கேட்கிறார். மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
தேவையின்றி மக்களை குழப்பும் வகையில் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்து அதிமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆணையத்தில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்த பின்னரும் கர்நாடகா நீர் திறக் மறுக்கிறது.
மேகதாது விவகாரத்தில் சட்டநடவடிக்கை தொடர்பாக ஒரு சில நாட்களில் அறிவிப்பு வரும். முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா, இல்லையா என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.