முதல் தோற்றம் வெளியீடு ; ஜீ​வாவின் ‘தகப்பன்’

சென்னை:
ஜீவா நடிக்​கும் ‘தகப்​பன்’ படத்தை ‘கி​டா’ படத்தை இயக்​கிய ரா.வெங்​கட் இயக்​கு​கிறார். சுகு​மார் ஒளிப்​ப​திவு செய்​கிறார்.

நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்​கிறார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்​களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்​பில் குமார் தயாரிக்​கும் இப்​படத்​துக்​குச் சுயாதீன இசைக்​கலைஞர் மார்​ஷல் ராபின்​சன் இசையமைக்​கிறார்.

அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்​றும் மனித உணர்​வு​களை மைய​மாகக் கொண்ட ஆழமான குடும்​பக் கதை​யாக உரு​வாகி வரும் இப்​படத்​தின் முதல் தோற்​றம் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

“மதுரை பின்​னணி​யில் உரு​வாகும் இப்​படத்​தின் 50 சதவீத படப்​பிடிப்பு நிறைவடைந்​துள்​ளது. ‘தெ​னாவட்டு ’ திரைப்​படத்​துக்​குப் பிறகு, கிராமத்​துப் பின்​னணி​யில் ஜீவா நடிக்​கும் படம் இது.

அவரது திரைப்​பயணத்​தில் முக்​கிய​மான மற்​றும் வித்​தி​யாச​மான படைப்​பாக இப்​படம் அமை​யும்​” என்​று படக்​குழு​வினர்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *