ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் மண்ணின் மகள் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்!!

சென்னை:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கான பல்வேறு திட்டங்களை அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.

நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்​ஜெட்​டை சட்டப்​பேரவையில் இன்று நிதியமைச்​சர் மரிய வில்​சன் தாக்​கல் செய்தார். அதில், சமூக நீதி துறையில் வெளியான அறிவிப்புகள் விவரம்:

அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம் ரூ.131 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

வெற்றி தொழில்முனைவோர் திட்டத்துக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தொழில் முனைவு திறன் ஊக்குவிக்கப்படும், இத்திட்டத்திற்காக ரூபாய் 125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் மண்ணின் மகள் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பழங்குடியினர் குடியிருப்புகள் வீடுகள், பள்ளிகள், விடுதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஆன்றோர் மேம்பாட்டு திட்டம் ரூ.250 கோடியில் மேம்படுத்தப்படும்.

ஆதிதிராவிடர்களுக்கான சிறப்பு கூறுகள் திட்டத்தின் கீழ் ரூ.25,225 கோடியும், பழங்குடியினருக்கான துணைத் திட்டத்தின் கீழ் 2,079 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

திருத்த வரவு – செலவு திட்ட மதிப்பீடுகளில் சமூக நீதித்துறைக்கு ரூ.3,935 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையில் வெளியான அறிவிப்புகள் விவரம்:

தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்படும். பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியை எவ்வித தடையும் இன்றி தொடர்ந்திட ரூ.372 கோடி ரூபாய் கல்வி உதவி தொகைக்காக ஒதுக்கப்படும்.

77 கோடி ரூபாய் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்திற்காக ஒதுக்கப்படும்.

கல்வி இடைநீற்றலை தவிர்க்கும் பொருட்டு மாணவிகளுக்கு வழங்கும் ஊக்கத்தொகைக்காக 13.41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *