சுரத்தில்லாத புஸ்வாண பட்ஜெட்டாக ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது !! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

சென்னை,
சுரத்தில்லாத புஸ்வாண பட்ஜெட்டாக ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது என்று முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழக பட்ஜெட் 2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘Blast Blast’-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste’ எனச் சொல்லும்படிதான் இருக்கு!

அதுமட்டுமல்ல, இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் Remake Version budget!


மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,

  • ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
  • வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
  • ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
  • முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!

மொத்தத்தில், சொந்தமாகவும் யோசிக்காத, சொன்னதையும் செய்யாத, சுரத்தில்லாத புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *