சென்னை:
சென்னை டர்போ ரைடர்ஸ், ஜேகே டயர் இணைந்து இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதன் முதல் சுற்று கோவையில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் வரும் செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெறுகிறது.
தொடர்ந்து இதே பகுதியில் 2-வது சுற்று அக்டோபர் 23 முதல் 25 வரை நடத்தப்படுகிறது.
3-வது சுற்று நவம்பர் 13 முதல் 15 வரை பெங்களூருவிலும் இறுதிச் சுற்று டிசம்பர் 11 முதல் 13 வரை சென்னைக்கு அருகிலுள்ள இருங்காட்டுக் கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போட்டிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தமிழ் ஹாக்கி லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தெற்கு ரயில்வே 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணியை வீழ்த்தியது.
தெற்கு ரயில்வே அணி சார்பில் சண்முகம் 2 கோல்களும், கோபிந்த் படேல் ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் எஸ்டிஏடி 4-2 என்ற கோல் கணக்கில் வருமானவரித் துறை அணியை தோற்கடித்தது. எஸ்டிஏடி அணி தரப்பில் கிருஷ்ணன் 2 கோல்களும் கவுதம், அரவிந்த் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.