உலகக் கோப்பை ஹாக்கி தொடர் : 2-வது சுற்றில் நுழைந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!!

ஆம்ஸ்டல்வீன்:
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்​லாந்து மற்​றும் பெல்​ஜி​யத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் போட்டியில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் இங்​கிலாந்​துடன் மோதி​யது.

இந்த ஆட்​டம் கோல்​களின்றி டிரா​வில் முடிவடைந்​தது. இந்​திய அணிக்கு 6 பெனால்டி கார்​னர் வாய்ப்​பு​களும், இங்​கிலாந்து அணிக்கு 12 பெனால்டி கார்​னர் வாய்ப்​பு​களும் கிடைத்​தன.

ஆனால் இரு அணி​களின் வீராங்​க​னைகளும் இந்த வாய்ப்​பு​களை சரி​யாக பயன்​படுத்​திக்​கொள்​ள​வில்​லை.

லீக் சுற்​றின் முடி​வில் இந்​திய அணி 5 புள்​ளி​களு​டன் தனது பிரி​வில் 2-வது இடம் பிடித்து 2-வது சுற்​றுக்கு முன்​னேறியது. இந்​திய மகளிர் அணி தனது முதல் ஆட்​டத்​தில் 2-2 என்ற கோல் கணக்​கில் சீனா​வுடன் டிரா செய்​திருந்​தது.

தொடர்ந்து 2-வது ஆட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்​காவை 6-1 என்ற கோல் கணக்​கில் வீழ்த்​தி​யிருந்​தது. இதே பிரி​வில் சீனா 2 வெற்​றி, ஒரு டிரா​வுடன் 7 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து 2-வது சுற்​றில்​ கால்​ப​தித்​தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *