சின்க்ஃபீல்டு கோப்பை செஸ் தொடர்: 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா!!

செயின்ட் லூயிஸ்: 

அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் கிளப்​பில் சின்க்ஃபீல்டு கோப்பை செஸ் தொடர் நடை​பெற்​றது.

9 சுற்​றுகள் கொண்ட இந்த தொடரின் கடைசி சுற்​றில் நேற்று இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​. பிரக்ஞானந்தா, நெதர்​லாந்​தின் அனிஷ் கிரி​யுடன் மோதி​னார். இந்த மோதல் 37-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது.

இதே​போன்று அமெரிக்​கா​வின் வெஸ்ஸி சோ தனது கடைசி சுற்​றில் உஸ்​பெகிஸ்​தானின் ஜவோகிர் சிந்​தரோவுடன் டிரா செய்​தார். 9 சுற்​றுகளின் முடி​வில் பிரக்​ஞானந்​தா​வும், வெஸ்ஸி சோவும் தலா 5.5 புள்​ளிகளை பெற்று முதலிடத்​தில் இருந்​தனர்.

இதையடுத்து வெற்​றி​யாளரை தீர்​மானிக்க டைபிரேக்​கர் நடத்​தப்​பட்​டது. இதில் 2 ரேபிட் போட்​டிகளும் சமனில் முடிவடைந்​தது.

இதையடுத்து நடத்​தப்​பட்ட ஆர்​மகெ​டான் ஆட்​டத்​தில் பிரக்​ஞானந்தா வெள்ளை காய்​களு​ட​னும் வெஸ்லி சோ கருப்பு காய்​களு​ட​னும் விளை​யாடி​னார்​கள்.

இதில் கருப்பு நிற காய்​களு​டன் விளை​யாடு​பவர் டிரா செய்​தாலே அது வெற்​றி​யாகக் கருதப்​படும் என்ற விதி​யி​னால் வெஸ்லி சோ ஆட்​டத்தை டிரா செய்து சாம்​பியன் பட்​டம் வென்​றார். பிரக்​ஞானந்தா 2-வது இடத்​துடன் தொடரை நிறைவு செய்​தார்.

8-வது சுற்​றில் பிரக்​ஞானந்தா வெற்றி பெற்ற போதே இந்த ஆண்​டின் இறு​தி​யில் நடை​பெற உள்ள கிராண்ட் செஸ் டூர் இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்​றிருந்​தார்.

கிராண்ட் செஸ் டூர் தொடரின் புள்​ளி​கள் பட்​டியலில் முதல் 4 இடங்​களை பிடிப்​பவர்​களே இறு​திப் போட்​டிக்கு தகுதி பெறு​வார்​கள்.

பிரக்​ஞானந்தா 34.5 புள்​ளி​களு​டன் முதலிடத்தை பிடித்து இறு​திப் போட்​டி​யில் நுழைந்​துள்​ளார்.

வெஸ்லி சோ 34.5 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தை​யும், அமெரிக்​கா​வின் பேபி​யானோ கருனா 29.5 புள்​ளி​களு​டன் 3-வது இடத்​தை​யும், ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமர் 28.5 புள்​ளி​களு​டன் 4-வது இடத்​தை​யும் பிடித்து இறுதி போட்​டிக்​கு முன்​னேறி உள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *