உல​கக் கோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜெண்டி னாவிடம் தோல்வியடைந்த இந்திய அணி!!

ஆம்ஸ்டல்வீன்:
உல​கக் கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று ஆடவர் பிரி​வின் 2-வது சுற்​றில் இந்​திய அணி, அர்​ஜெண்​டி​னா​வுடன் மோதி​யது.

இந்த ஆட்​டத்​தில் குறைந்​த​பட்​சம் 2 கோல்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றால் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை பெறலாம் என்ற நெருக்​கடி​யுடன் இந்​திய அணி களமிறங்​கியது.

ஆனால் இந்​திய அணி 3-5 என்ற கோல் கணக்​கில் தோல்வி அடைந்து அரை இறு​திக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​தது.

அர்​ஜெண்​டினா அணிக்​காக டோமஸ் டொமேனே (33, 45-வது நிமிடங்​கள்), ஜோவாகின் தோஸ்​கானி (1, 53-வது நிமிடங்​கள்) ஆகிய இரு​வரும் தலா 2 கோல்​களை அடித்​தனர்.

மற்​றொரு கோலை 6-வது நிமிடத்​தில் நிக்​கோலஸ் டெல்லா தோரே அடித்​தார்.

இந்​திய அணி சார்​பில் சுக்​ஜீத் சிங் 34 மற்​றும் 58 நிமிடங்​களில் ஃபீல்டு கோல் அடித்​தார். 36-வது நிமிடத்​தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக்கை ஹர்​திக் சிங் கோலாக மாற்​றி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *