நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி!!

நியூயார்க்:
நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இதன் மூலம் அவர் இந்த தொடரிலிருந்து முதல் சுற்றோடு வெளியேறி உள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவின் மரியானோ நவோனுக்கு எதிராக ஜோகோவிச் களம் கண்டார்.

இதில் 7-6 (7/5), 5-7, 4-6, 6-2, 6-1 என்ற கணக்கில் நவோன் வெற்றி பெற்றார். இதனால் ஜோகோவிச் இந்தத் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.

39 வயதான ஜோகோவிச், பிரதான தொடரில் முதல் சுற்றோடு வெளியேறுவது இது மூன்றாவது முறை. கடைசியாக கடந்த 2006-ல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றோடு அவர் வெளியேறி இருந்தார்.

அப்போது அவருக்கு வயது 18. இந்தச் சூழலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் முதல் சுற்றோடு ஜோகோவிச் வெளியேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

25-வது பட்டத்துக்கான தேடல் தொடர்கிறது

தனது 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முயற்சியில் கடந்த 2023 முதல் ஜோகோவிச் முனைப்பு காட்டி வருகிறார்.

2023-ல் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் தொடரில் பட்டம் வென்றிருந்தார். இதுவரை மொத்தம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அவர் வென்றுள்ளார்.

இந்நிலையில், தனது 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் அவர் களமிறங்கினார்.

அமெரிக்க ஓபனில் வாகை சூடினால் மார்கரெட் கோர்ட்டின் 24 கிராண்ட்ஸ்லாம் பட்ட சாதனையை முறியடித்து, அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பு இருந்தது.

நான்கு முறை அமெரிக்க ஓபன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், கடைசியாக 2023-ல் கோப்பையைக் கைப்பற்றி இருந்தார்.

மேலும், 10 முறை அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

39 வயதில் இரு வார காலங் கள் நடைபெறும் இந்த தொடரில் உடல்தகுதி சவால்கள் அதிகமாக இருந்த சூழலில் முதல் சுற்றோடு அவர் வெளியேறி உள்ளார்.

அவரது 25-வது பட்டத்துக்கான தேடல் டென்னிஸ் உலகில் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *