அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி!!

நியூயார்க்:
ஆண்​டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்​னிஸ் தொட​ரான அமெரிக்க ஓபன் நியூ​யார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்​கியது. ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 4-ம் நிலை வீரரும் 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்​டம் வென்​றவரு​மான செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், அர்​ஜெண்​டி​னா​வின் 49-ம் நிலை வீர​ரான மரி​யானோ நவோனேவை எதிர்த்து விளை​யாடி​னார்.

முதல் செட்டை மரி​யானோ நவோனே 7-6 (7-5) என்ற கணக்​கில் கைப்​பற்​றி​னார். இதன் பின்​னர் அடுத்த 2 செட்​களை ஜோகோ​விச் 7-5, 6-4 என தன்​வசப்​படுத்தி​னார்.

4-வது செட்டை ஜோகோ​விச் எளி​தாக கைப்​பற்​றக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் தொடக்​கத்​திலேயே ஆதிக்​கம் செலுத்​திய மரி​யானோ நவோனே 6-2 என கைப்​பற்​றி​னார்.

இதனால் வெற்​றியை தீர்​மானிக்​கும் வகை​யில் அமைந்த கடைசி செட் ஆட்​டம் பரபரப்​பானது. எனினும் பதற்​றம் இல்​லாமல் விளை​யாடிய மரி​யானோ நவோனே 6-1 என்ற கணக்​கில் தன்​வசப்​படுத்​தி​னார்.

முடி​வில் 4 மணி நேரம் 36 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ஜோகோ​விச் 6-7 (5-7), 7-5, 6-4, 2-6, 1-6 என்ற செட் கணக்​கில் தோல்வி அடைந்​தார்.

அமெரிக்க ஓபன் தொடரில் நோவக் ஜோகோ​விச் முதல் சுற்​றுடன் வெளி​யேறு​வது இதுவே முதன்​முறை​யாகும். ஜோகோ​விச் அமெரிக்க ஓபன் முதல் சுற்​றில் இதற்கு முன்​னர் 19 முறை விளை​யாடி ஒன்​றில் கூட தோல்வி அடை​யாமல் இருந்​திருந்​தார்.

மேலும் 2006-ம் ஆண்டு ஆஸ்​திரேலிய ஓபனுக்​குப் பிறகு எந்​தவொரு கிராண்ட் ஸ்லாம் தொடரின் முதல் போட்​டி​யிலும் ஜோகோ​விச் தோல்​வியடைந்​த​தில்​லை. இதற்கு தற்​போது முற்​றுப்​புள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது.

7-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் டேனியல் மேத்​வ​தேவ், 91-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் ஹூகோகஸ்​டனை எதிர்​கொண்​டார்.

இதில் டேனியல் மேத்​வ​தேவ் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 20-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டாமி பால் 6-7 (3-7), 6-1, 6-3, 6-3 என்ற செட் கணக்​கில் 94-ம் நிலை வீர​ரான ஹாங்​காங்​கின் கோல்​மேன் வாங்கை வீழ்த்​தி​னார்.

15-ம் நிலை வீர​ரான கஜகஸ்​தானின் அலெக்​ஸாண்​டர் பப்​ளிக் 6-4, 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் ஜே.ஜே,வூல்பை தோற்​கடித்து 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

29-ம் நிலை வீர​ரான இங்​கிலாந்​தின் கேமரூன் நோரி, 19-ம் நிலை வீர​ரான செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா ஆகி​யோரும் தங்​களது ஆட்​டங்​களில் வெற்றி பெற்று 2-வது சுற்​றில் நுழைந்​தனர்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் 64-ம் நிலை வீராங்​க​னை​யான ருமேனி​யா​வின் எலெனா கேப்​ரியலா ரூஸை​யும், 19-ம் நிலை வீராங்​க​னை​யான இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலினி 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்​கில் 106-ம் நிலை வீராங்​க​னை​யான சுலோவேனி​யா​வின் வெரோனிகா எர்​ஜாவெக்​கை​யும் வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.

9-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் எலினா ஸ்விட்​டோலினா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் அர்​ஜெண்​டி​னா​வின் 91-ம் நிலை வீராங்​க​னை​யான சோலனா சிய​ராவை​யும், 11-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் மார்தா கோஸ்ட்​யுக் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்​கில் ஆஸ்​திரேலி​யா​வின் 169-ம் நிலை வீராங்​க​னை​யான ஸ்ட்ரோம் ஹன்​டரை​யும் வீழ்த்​தி 2-வது சுற்​றில்​ நுழைந்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *