இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் ; 2-வது சுற்றில் அல்கராஸ், நவோமி ஒசாகா!!

நியூயார்க்:
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இதன் 2-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 99-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ரோமன் சஃபியுலினை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

8-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 1-6, 6-1, 7-6 (7-3), 6-2 என்ற செட்கணக்கில் 56-ம் நிலை வீரரான நெதர்லாந்தின் டாலன் கிரிக்ஸ்பூரை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார்.

10-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் 6-4, 6-7 (3-7), 1-6, 4-6 என்ற செட் கணக்கில் 53-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸிடம் தோல்வி அடைந்தார்.

11-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்செஸ் தியாபோ 6-4, 4-6, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த 90-ம் நிலை வீரரான மார்ட்டின் டேமை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

3-ம் நிலை வீரரான கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் 7-5, 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் 85-ம் நிலை வீரரான ரிங்கி ஹிஜிகாடாவை வீழ்த்தினார்.

2016-ம் ஆண்டு சாம்பியனும் 127-ம் நிலை வீரருமான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6-7 (4-7), 6-7 (3-7), 6-0 என்ற செட் கணக்கில் 43-ம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியிடம் தோல்வி அடைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான பெலாரஸின் அரினா சபலென்கா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 59-ம் நிலை வீராங்கனையான கொலம்பியாவின் கமிலா ஒசாரியோவை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார்.

13-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா 7-6 (8-6), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் 101-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டசியா ஜகரோவாவையும், 10-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த 60-ம் நிலை வீராங்கனையான ஆஷ்லின் க்ரூகரையும் வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தனர்.

6-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் லின்டா நோஸ்கோவா 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் 78-ம் நிலை வீராங்கனையான கேட்டி வாலிநெட்ஸையும், 8-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 80-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சியு வாங்கையும் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

7-ம் நிலை வீராங்கனையான செக்குடியசின் கரோலினா முச்சோவா, 26-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவரோவா ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் நுழைந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *