சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்ட னில் உன்னதி ஹூடா தோல்வி!!

ஷென்சென்:
சீனாவின் ஷென்சென் நகரில் சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் உன்னதி ஹூடா 10-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் 12-ம் நிலை வீராங்கனையான கிம் கா யுனிடம் தோல்வி அடைந்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிகரண் அம்சகருணன், அர்ஜூன் ஜோடியானது சீனாவின் சென் போ யாங், லியு யி ஜோடியுடன் மோதியது.

இதில் இந்திய ஜோடி முதல் செட்டில் 8-11என்ற செட் கணக்கில் பின்தங்கியிருந்த நிலையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *