அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ் த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; முதல்வர் விஜய்!!

சென்னை:
“கிருஷ்ண உபதேசத்தின்படி எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும்” என தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும்.

தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி என்பது கிருஷ்ணரின் அவதார நன்னாள். ஆவணி மாதத்தில், தேய்பிறை அஷ்டமி நாளில், ரோகிணி நட்சத்திரத்தில், பகவான் கிருஷ்ணரின் திரு அவதாரம் நிகழ்ந்தது எனத் தெரிவிக்கிறது புராணம்.

எனவே அந்தநாளில், கிருஷ்ண ஜெயந்தி இந்துக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *