முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாளை லண்டன்செல்கிறார்!!

சென்னை:
முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாளை லண்டன் செல்கிறார்.

சென்னையில் இருந்து நாளை துபாய் செல்லும் முதல்வர், அங்கிருந்து லண்டன் செல்கிறார். முதல்வருடன் உயர் அதிகாரிகள் குழு செல்கின்றது.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் சில்வர்ஸ் டோனில் நடைபெறும், தனது நெருங்கிய நண்பர் நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தை முதல்வர் பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய், தமிழகத்தில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தய ங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக் கப்படும்.

ஃபார்முலா உள்ளிட்ட பன்னாட்டு பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேச தரத்திலான பந்தய தடம் மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *