மேஷம்
எதிரிகள் விலகும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
ரிஷபம்
யோகமான நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் உருவாகும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.
மிதுனம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
கடகம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும்.
சிம்மம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். பணவரவு திருப்தி தரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
கன்னி
வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும் நாள். வளர்ச்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
துலாம்
மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தூரதேசத்திலிருந்து நல்ல செய்தி வந்துசேரலாம். தொலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும்.
விருச்சிகம்
முன்னேற்றம் கூடும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும்.
தனுசு
விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்துச் செல்லவேண்டிய நாள். வேலையாட்களால் பிரச்சனை ஏற்படும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் உண்டு.
மகரம்
தட்டுப்பாடுகள் அகல கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டிய நாள். எதிர்பார்த்த தொகை வந்தாலும் இருமடங்காக செலவு வரும்.
கும்பம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உயர் அதிகாரிகள் உங்களின் செயல்பாடுகளைக் கண்டு ஆச்சரியப்படுவர். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும்.
மீனம்
வளர்ச்சி கூடும் நாள். கடனாகக் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். உறவினர்கள் உதவி கிட்டும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.