ஒடிசாவில் 5 சிறிய ஒராங்குட்டான் குட்​டிகள் மீட்பு!!

பாலசோர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்​டத்​தில் உள்ள கிராமம் ஒன்​றின் வனப்​பகு​தி​யில் நேற்று அதி​காலை 5 சிறிய ஒராங் குட்டான் குட்​டிகள் உலா வந்த அரி​தான காட்சி உள்​ளூர் மக்களை வியப்​பில் ஆழ்த்​தி​யுள்​ளது.

இதையடுத்​து, அந்த அரியவகை குரங்​கு​களை வனத்​துறை​யினர் உடனடி​யாக சென்று மீட்​டனர்.

இச்​சம்​பவம் குறித்து பாலசோர் கோட்ட வன அதி​காரி பிரதீக் பிரகாஷ் இந்​தால்​கர் கூறிய​தாவது:

பாலசோரின் போக்​ராய் பகுதியில் உள்ள படா​பாய் கிராமத்​திற்கு அரு​கிலுள்ள காட்டுப்பகுதி​யில் அதி​காலை 6 மணி​யள​வில் 5 இளம் ஒராங்குட்டான்​கள் சுற்​றித் திரிவதை பொது​மக்​கள் கண்டுள்ளனர்.

அரி​தான இந்த உயி​ரினங்​கள் குறித்து தகவல் காட்டுத்தீ போல் பரவியதை அடுத்​து, ஒரு மணி நேரத்​துக்குள் ஆயிரக்​கணக்​கான மக்​கள் அப்​பகு​தி​யில் கூடினர்.

நிலை​மை​யைக் கட்​டுப்​படுத்த வனத்​துறை​யினர் உடனடி​யாகச் தலை​யிட்​டு, அந்த விலங்​கு​களைப் பத்​திர​மாக மீட்​டனர்.

சர்​வ​தேச வனவிலங்கு கடத்​தல் கும்​பலால் இந்த ஒராங்​குட்​டான்​கள் மாநிலத்​துக்குள் கடத்தி வரப்​பட்​டிருக்​கலாம் என சந்​தேகிக்​கப்​படு​கிறது.

மீட்​கப்​பட்ட 5 குட்டி ஒராங்​குட்​டான்​களும் வனத்​துறை அலு​வல​கத்​துக்கு கொண்​டு​வரப்​பட்​டன. மீட்​கப்​பட்ட ஐந்து குட்டிகளில் நான்கு குட்​டிகள் மிக​வும் ஆரோக்​கிய​மாக உள்​ளன.

அவை உணவை​யும் ஓஆர்​எஸ் கரைசலை​யும் உட்​கொண்டு வருகின்​றன. கால்​நடை மருத்​து​வர்​கள் அவற்​றைப் பரிசோ​தித்து சிகிச்சை அளித்து வரு​கின்​றனர்.

தற்​போது வனத்​துறை அதிகாரிகளின் நேரடிப் பராமரிப்​பிலும் கண்​காணிப்​பிலும் அவை வைக்​கப்​பட்​டுள்​ளன.

எல்லை தாண்​டிய வனவிலங்கு கடத்தலின் பின்​னணி குறித்து வனத்​துறை அதி​காரி​கள் தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். இவ்​வாறு பிரதீக்​ பிரகாஷ் தெரி​வித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *