மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளு க்கான இன்றைய ராசிபலன்… !!

மேஷம்

புகழ் கூடும் நாள். புதிய மனிதர்களின் சந்திப்பு உண்டு. நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

ரிஷபம்

நாடாளும் நபர்களின் நட்பால் நலம் சேரும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மிதுனம்

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு.

கடகம்

வளர்ச்சி கூடும் நாள். பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பழைய பிரச்சனைகள் படிப்படியாக மாறும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

சிம்மம்

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

கன்னி

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

துலாம்

எதிரிகள் உதிரியாகும் நாள். குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கல்களில் ஆதாயம் உண்டு. கவுரவப் பதவிகள் வரலாம். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும்.

விருச்சிகம்

நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். விழாக்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

தனுசு

விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். சுபகாரியம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வியாபார விருத்திக்கு நண்பர்கள் உதவி செய்வர்.

மகரம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். பொருளாதார நெருக்கடி ஏற்படும். தொழில் ரீதியான பிரச்சனைகளுக்கு முடிவெடுக்க முடியாது. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்

முன்னேற்றம் கூடும் நாள். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். தகுந்த நபர்களின் ஆலோசனைகள் தக்க விதத்தில் கைகொடுக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

மீனம்

மனக்கலக்கம் ஏற்படும் நாள். தொழிலில் மறைமுகப் போட்டிகள் உருவாகும். வாகன வழியில் செலவு உண்டு. எடுத்த காரியங்களை நிறைவேற்ற இயலாது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *