நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் அதிக வசூலித்து சாதனை!!

கொச்சி:
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், மலையாளத் திரையுலக வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இதற்கு முன் முதலிடத்தில் இருந்த ‘லோகா: சாப்டர் 1’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்து, இப்படம் இந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

திரையரங்குகளில் வெளியான 24-வது நாளில், இப்படத்தின் இந்திய மொத்த வசூல் ரூ.166.49 கோடியைக் கடந்துள்ளது.

இந்திய அளவில் இப்படம் ரூ.142.56 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம், படத்தின் ஒட்டுமொத்த உலகளாவிய வசூல் ரூ.309.05 கோடியைத் தொட்டுள்ளது.

முன்னதாக முதலிடத்தில் இருந்த ‘லோகா: சாப்டர் 1’ படம் உலகளவில் ரூ.303.86 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவான இப்படம், வெளியான 5 நாட்களிலேயே உலகளவில் ரூ.100 கோடியையும், 12 நாட்களி லேயே ரூ.200 கோடியையும் கடந்து அதிவேகமாக வசூல் குவித்தது.

கேரளாவில் மட்டும் ரூ.132.45 கோடியைக் கடந்து அதிக வசூல் செய்த படமாகத் திகழும் ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’, வெளிநாடுகளிலும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

4-வது வார இறுதியில் பாக்ஸ் ஆபீஸில் 54% கூடுதல் வசூல் வளர்ச்சியைப் பதிவு செய்து, வசூல் வேட்டையைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *