தமிழகத்​தில் உண்​ணிக் காய்ச்​சல் பாதிப்பு வரும் ஜனவரி மாதம் வரை இருக்​கும்; காய்ச்​சல் இருந்​தால் உடனே மருத்​து​வ​மனைக்கு செல்ல வேண்​டும் ; பொது சுகா​தா​ரத்​துறை இயக்​குநர் சோமசுந்​தரம் !!

சென்னை:
தமிழகத்​தில் உண்​ணிக் காய்ச்​சல் பாதிப்பு வரும் ஜனவரி மாதம் வரை இருக்​கும், காய்ச்​சல் இருந்​தால் உடனே மருத்​து​வ​மனைக்கு செல்ல வேண்​டும் என்று பொது சுகா​தா​ரத்​துறை இயக்​குநர் சோமசுந்​தரம் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை அண்ணா பல்​கலைக்​கழக மாணவர் ஒரு​வர் டெங்கு காய்ச்​சலால் உயி​ரிழந்​த​தாக தகவல் வெளி​யான நிலை​யில், இதை மறுத்த சுகா​தா​ரத்​துறை ‘ஸ்க்​ரப் டைபஸ்’ என்ற உண்​ணிக் காய்ச்​சல் பாதிப்பு தான் உயி​ரிழப்​புக்கு காரணம் என்று தெரி​வித்​தது.

இந்​நிலை​யில், பொது சுகா​தா​ரத்​துறை இயக்​குநர் சோமசுந்​தரம் உண்​ணிக் காய்ச்​சல் தொடர்​பான விழிப்​புணர்வு வீடியோ ஒன்றை சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டுள்​ளார்.

அந்த வீடியோ​வில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: உண்​ணிக் காய்ச்​சல் என்​பது பாக்​டீரியா கிரு​மி​யால் வரும் காய்ச்​சல் ஆகும்.

ஆள் உயரத்​துக்கு வளரும் புல், புதர்​கள் மற்​றும் வயல்​வெளி​களில் வாழும் ஒரு வகை உண்ணி மற்​றும் பூச்சி கடிப்​ப​தன் மூலம் இந்த நோய் பரவு​கிறது.

முன்பு காடு​கள் மற்​றும் வயல்​வெளி​களில் வேலை பார்ப்​பவர்​களுக்கு மட்​டுமே இந்த நோய் பரவி வந்​தது.

ஆனால், தற்​போது பரு​வநிலை மாற்​றம் மற்​றும் மக்​களின் இடப்​பெயர்வு காரண​மாக அனைத்து இடங்​களி​லும் பரவலாக நோய் காணப்​படு​கிறது.

குறிப்​பாக, ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை இந்த காய்ச்​சலின் பாதிப்பு அதி​க​மாக இருக்​கும். இந்த காய்ச்​சலை கண்டு பொது​மக்​கள் அச்​சப்பட தேவை​யில்​லை.

மற்ற காய்ச்​சலை போன்று சாதா​ரண​மாக உடல்​வலி, பசி​யின்மை போன்ற அறிகுறிகள் இருக்​கும்.

காய்ச்​சல் அறிகுறி இருந்​தால் தாம​திக்​காமல் அரு​கில் உள்ள மருத்​து​வரை அணுக வேண்​டும்.இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

அதே வீடியோ​வில், மதுரை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை பொதுநல மருத்​து​வர் பி.​வி.​பால​முரு​கன் கூறுகை​யில், “வயல்​வெளி​கள், புல்​வெளி​களில் நடக்​கும் போது, பேன்ட், ஷூ, முழு கை சட்டை அணிய வேண்​டும். டெங்கு காய்ச்​சல் போல், அதிக காய்ச்​சல், தலை​வலி, உடல் சோர்​வு, வறட்டு இரு​மல் போன்​றவை இருக்​கும். குறிப்​பாக, 4 மணிக்கு காய்ச்​சல் இல்​லாமல் இருந்​தவருக்​கு, 4:15 மணி​யள​வில் அதி​கள​வில் காய்ச்​சல் பாதிப்பு இருக்​கும்.

உண்ணிக் காய்ச்சலை ஆரம்ப நிலை​யில் கண்​டறிந்​தால் குணப்​படுத்​தலாம். உரிய சிகிச்சை பெறா​விட்​டால், நுரை​யீரல் பாதிப்​பு, மூளை பாதிப்​பு, இதய பாதிப்பு ஏற்​படும். அவ்​வாறு வந்​தா​லும் சிகிச்சை அளிக்​கப்​படும்.

ஆனால், இணை நோ​யாளி​கள் தாமத​மாக வரும்​போது உயி​ரிழப்பு ஏற்​படும்.

இந்த நோய்க்​கான பரிசோதனை அனைத்து அரசு மருத்​து​வ​மனை​களி​லும் செய்​யப்​படு​கிறது” என்று தெரி​வித்​துள்​ளார்.

சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “அண்ணா பல்​கலைக்​கழக மாணவர் உயி​ரிழப்​புக்கு உண்​ணிக் காய்ச்​சல் எனப்​படும் ஸ்கரப் டைபஸ் பாதிப்பு தான் காரணம்.

டெங்கு போன்றே காய்ச்​சல், தலை​வலி, வாந்தி என இருக்​கும். பூச்சி கடிக்​கும் இடத்​தில் ஒரு தழும்பு போன்ற வடு இருக்​கும். 2025-ல் 5,142 ஸ்கரப் டைபஸ் பாதிப்​பு​கள் பதி​வாகி​யுள்​ளன.

இந்த ஆண்​டில் இது​வரை 4,619 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்” என்​று தெரிவித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *