கிரானைட் தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் விஜய் உத்தரவு!!

சென்னை:
கிரானைட் தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் விஜய உத்தரவிட்டுள்ளார்.

சிறுமிகளை வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கியதற்காக போக்ஸோ வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணியை 3 நாள் காவலில் எடுத்து போலீ​ஸார் விசா​ரித்து வருகின்​றனர்.

இந்நிலையில், ‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் விஜ்ய உத்தரவிட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரை தொடர்புகொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அலுவலகத்துக்கு வந்து ‘பென்டிரைவ் ஒன்றை கொடுத்ததாகவும், அதில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த வீடியோவை ஆய்வு செய்தபோது, வயதான நபர் ஒருவர் 13 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சி இருந்தது. இதன் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

வீடியோவில் இடம்பெற்றிருந்த முதியவர் பிரபல கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி (84) என்பது தெரிய வந்தது. மேலும், வீரமணி தேனாம் பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாக பொறுப்புக்களை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் ஒப்படைத்திருந்தார்.

அந்த வீட் டுக்கு சிறுமிகள் அழைத்து வரப்பட்டு பாலியல் குற்றங்கள் நடைபெற்றதாகவும், மேலும் சில தொழில் அதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு சிறுமிகள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீஸார் நடத்திய சோதனையில் வழக்குடன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து வீரமணி, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்​னையில் 84 வயது முதி​ய​வர் ஒரு​வர் சிறுமியை பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​தி​யது தொடர்​பான வீடியோ காவல் ​துறை​யினருக்கு கிடைத்​தது. இதுகுறித்​து சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் கடந்த அக்​டோபரில் போக்சோ உள்​ளிட்ட பல்வேறு பிரிவு​களின் கீழ் வழக்​கு பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கினர்.

இதனையடுத்து, பிரபல ஜெம் கிரானைட்ஸ் நிறுவன அதிபர் வீரமணி (84) மற்றும் சாந்தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​கன் ஆகியோரை போலீஸார் கடந்த மாதம் 28-ம் தேதி கைது செய்தனர். இந்த விவகாரத்தில் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல தொழிலதிபர்களுக்கு இதில்தொடர்பு உள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பாதிக்​கப்​பட்ட சிறுமி ஒரு​வர் போலீ​ஸாரிடம் இதுபற்றி தெரி​வித்​துள்​ளார். இதைத் ​தொடர்ந்​து, சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த வீரமணியை போலீ​ஸார் 3 நாள் காவலில்​ எடுத்​து தற்​போது விசா​ரித்​து வரு​கின்றனர்.

இந்நிலையில், ‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் விஜ்ய உத்தரவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *