சென்னை:
“நாடு முழுவதும் மின் பற்றாக்குறை இருக்கிறது. திமுக ஆட்சியில் மின்மாற்றிகள் முறையாகப் பராமரிக்கப் படவில்லை.
6ஆயிரம் மின்மாற்றிகளை சீரமைக்க வேண்டி இருக்கிறது. தமிழகத்துக்கு உடனடியாக 600 துணை மின் நிலையங்கள் தேவை” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு செய்த பிறகு, அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர் களிடம் பேசுகையில், “இந்தியா முழுவதுமே மின்சாரப் பற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது.
நமக்கு துணை மின் நிலையங்கள் பற்றாக்குறையும் இருக்கிறது. நிறைய இடங்களில் கூடுதல் அழுத்தம் தாங்க முடியாமல் மின்மாற்றிகள் தீப்பற்றி எரிகின்றன.
வரும் காலங்களில் இவை சரி செய்யப்படும். மின் தேவைகளை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திமுக ஆட்சியில் மின்மாற்றிகள் முறையாகப் பராமரிக்கப் படவில்லை.
6 ஆயிரம் மின்மாற்றிகளை சீரமைக்க வேண்டி இருக்கிறது. தமிழகத்துக்கு உடனடியாக 600 துணை மின் நிலையங்கள் தேவைப்படுகிறது.
மின்வாரியத்துக்கு 10,000 பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
சீரமைப்பு பணிகளை துரிதமாக செய்கிறோம். வரவிருக்கும், கோடை மின் தேவையை சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
காற்றாலை மின் உற்பத்தி குறைவுவாக உள்ளது. மின்பாதிப்புகளை சரிசெய்ய அதிகாரிகளுக்கு, மக்களும் அவகாசம் தர வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.