பெங்களூரு:
மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்துக்கு சென்று தோசை சுட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பெங்களூரு நகருக்கு நேற்று வந்த மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராமேஸ்வரம் கஃபே உணவகத்துக்கு சென்றார்.
அங்குள்ள சமையலறைக்கு சென்ற அவர் வாடிக்கையாளர்கள், சமையல்காரர்களின் முன்னிலையில் மாவை ஊற்றி, சுடச்சுட தோசை சுட்டார்.
பின்னர் அவரே அந்த தோசையை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறினார். பின்னர் ஃபில்டர் காஃபி போட்டு நுரை பொங்க வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.
இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தமத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, “பெங்களூரு வந்தால் ராமேஸ்வரம் கஃபே வராமல் இருக்க மாட்டேன்.
இன்று அங்கு சென்று தோசை சுட்டேன். வெளியில் இருந்து பார்ப்பதற்கு தோசை சுடுவது எளிதாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னணியில் கடின உழைப்பு உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்த ‘செஃப்’ அவதார வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.